கடும் வறட்சியில் வாடும் கென்யா.! 14 வகையான வன உயிரினங்கள் உயிரிழப்பு.!
14 species of wild animals have died in Kenya due to severe drought
கிழக்கு ஆப்பிரிக்கா நாடுகளான எத்தியோப்பியா, கென்யா, எரித்திரியா மற்றும் ஜிபூட்டியில் 40 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு கடுமையான வறட்சி நிலவி வருகிறது.
குறிப்பாக கென்யாவில் வரலாறு காணாத அளவிற்கு வறட்சி ஏற்பட்டுள்ளதால் கடுமையாக பதிக்கப்பட்டுள்ளது. இதனால் உணவு மற்றும் நீர் பற்றாக்குறையால் 14 வகையான வனஉயிரினங்கள் வறட்சியின் கோரபிடியில் சிக்கி உயிரிழந்துள்ளன.
மேலும் வறட்சியால் இதுவரை 205 யானைகள், 512காட்டெருமைகள், 381 வரிக்குதிரைகள், 12 ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் 51 எருமைகள் உயிரிழந்துள்ளன.
இந்நிலையில் வன விலங்குகளின் உயிரிழப்பால் சுற்றுலா தலமாக இருந்த தேசிய பூங்காக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் அரசிற்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் மழை பொழிவதற்கான வாய்ப்பு குறைவாக இருப்பதால் வறட்சியால் வனவிலங்குகள் உயிரிழப்பதை தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
14 species of wild animals have died in Kenya due to severe drought