பாகிஸ்தானில் கோர விபத்து: பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்ததில் 15 பேர் பலி.! 60 பேர் காயம் - Seithipunal
Seithipunal


பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர் மற்றும் 60 பேர் காயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான் இஸ்லாமாபாத்தில் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 70-க்கும் மேற்பட்டோர் லாகூர் நோக்கி பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்பொழுது லாகூரில் இருந்து 240 கிமீ தொலைவில் உள்ள கல்லர் கஹார் உப்புத் தொடர் பகுதியில் சென்றபோது, திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரில் வந்த மூன்று வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதி விட்டு சாலையை விட்டு விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 60 பேர் காயமடைந்துள்ளனர். இதை எடுத்து இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்து மீட்பு குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக இரட்டை நகரங்களான ராவல்பிண்டி மற்றும் இஸ்லாமாபாத் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இவர்களில் 11 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் காயமடைந்தவர்களுக்கு சிறந்த மருத்துவ வசதிகளை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 people died and 60 injured in bus overturned in the ditch in Pakistan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->