#ஈகுவடார் || சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 15 கைதிகள் உயிரிழப்பு.! - Seithipunal
Seithipunal


ஈகுவடாரில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 15 கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

தென் அமெரிக்காவின் வடமேற்கு முனையில் அமைந்துள்ள நாடான ஈகுவடாரில் சிறைகளில் அளவுக்கு அதிகமான கைதிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ளதால் சிறைகளில் தொடர்ந்து அசாதாரண சூழல் நீடித்து வருகிறது.

மேலும் சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே அடிக்கடி வன்முறை சம்பங்கள் அரங்கேரி வருகின்றன. இந்நிலையில் ஈகுவடாரின் லடசுங்கா நகரில் உள்ள சிறையில் கைதிகளில் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளது.

இந்த மோதல் சற்று நேரத்தில் பெரும் கலவரமாக மாறி கைதிகள் ஒருவரை ஒருவர் கூர்மையான ஆயுதங்களால் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். இதையடுத்து சிறையில் கலவர தடுப்பு போலீசார் குவிக்கப்பட்டு, தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் கைதிகளை விரட்டியடித்து கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இந்த கலவரத்தில் 15 கைதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்த நிலையில், மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

15 prisoners died in a prison riot in Ecuador


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->