ஒரு கொசுக்கு 1.50 ரூபாய் பரிசா!!! நோயைக் கட்டுப்படுத்த வினோத முயற்சி....
1.50 rupees per mosquito Strange attempt to control disease
பிலிப்பைன்ஸ் நாட்டில் மணிலா நகர் அருகே உள்ள கிராம பகுதிகளில் வேகமாக டெங்கு காய்ச்சல் பரவி வருகிறது. இதில் பாதிக்கப்பட்ட இரண்டு பள்ளி மாணவர்கள் சமீபத்தில் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து அங்குள்ள ஊராட்சி நிர்வாகம் கொசுவை கட்டுப்படுத்த தீவிர முயற்சியும் நடவடிக்கையும் எடுத்து வருகிறது.

கொசு வேட்டை:
இதில் முதல் கட்டமாக ஒரு கொசுவை பிடித்துக் கொடுத்தால் ஒரு பிலிப்பைன்ஸ் பெசோ அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பின்படி ரூ. 1.50 வழங்கப்படும். இது போன்ற நூதன அறிவிப்பால் அங்குள்ள மக்கள் பலர் கொசுவை பிடித்துக் கொடுத்து அதிக பணம் வாங்கி சென்றனர். இதனால் அங்குள்ள ஏராளமானோர் கொசுவை பிடிக்கும் வேட்டையில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதுமட்டுமின்றி இந்த செய்தியானது உலக அளவில் பலரையும் கவர்ந்துள்ளது.
English Summary
1.50 rupees per mosquito Strange attempt to control disease