தவறான வீட்டின் கதவை தட்டிய சிறுவன்... பட்டென்று துப்பாக்கியால் சுட்ட நபர்... திடுக் சம்பவம்.!
16 year old boy shot dead for wrongly knocked the door
அமெரிக்காவைச் சார்ந்த கருப்பின இளைஞர் இனவெறி தாக்குதலால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அங்கு பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது. தனது சகோதரர்களை அழைத்து வருவதற்காக வீட்டின் கதவை தவறுதலாக தட்டியபோது இந்தக் கொடூர சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது.
அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தைச் சார்ந்த கருப்பின இளைஞன் ரால்ஃப் யார்ல் 16 வயதான இவர் தனது இரட்டை சகோதரர்களை அழைத்து வருவதற்காக 115 ஆவது குடியிருப்பிற்கு சென்று இருக்கிறார். அப்போது 115 ஆவது குடியிருப்புக்கு பதிலாக 115 ஆவது தெருவில் உள்ள வீட்டிற்கு சென்று தட்டி இருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த வீட்டின் உரிமையாளர் சிறுவனை துப்பாக்கியால் சுட்டு இருக்கிறார். தலை மற்றும் கைகளில் காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
தவறாக முகவரி மாரி வீட்டு கதவை தட்டிய சிறுவன் மீது இனவெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில வருடங்களாகவே கருப்பினத்தவர்கள் மீதான நிறவெறி தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன.
English Summary
16 year old boy shot dead for wrongly knocked the door