இந்தியாவின் இருமல் மருந்து உட்கொண்ட 18 குழந்தைகள் உயிரிழப்பு..!!
18 children died after consuming cough indian medicine
உஸ்பெகிஸ்தான் நாட்டின் மருத்துவமனைகளில் இருமல் மருந்து குடித்ததால் உடல் நலக்குறைவு ஏற்பட்ட 21 குழந்தைகள் அனுமதிக்கப்பட்டனர். அவ்வாறு அனுமதிக்கப்பட்டதில் 18 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் உஸ்பெகிஸ்தான் அரசு விசாரணை நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி "இந்தியாவின் நொய்டா நகரை சேர்ந்த தனியார் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் டாக்-1 மாக் என்ற மருந்தை இரும்பலுக்காக உட்கொண்ட 21 குழந்தைகளில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் பெற்றோர்கள் அல்லது மருந்தக விற்பனையாளர்களின் பரிந்துரையின் அடிப்படையில் உயிரிழந்த அனைத்து குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பெற்றோர்கள் 2 முதல் 7 நாட்கள் வரை தினமும் மூன்று முறை இந்த இருமல் மருந்தை குழந்தைகளுக்கு வழங்கியுள்ளனர். இந்த மருந்துகளை ஆய்வு செய்ததில் எத்திலின் கிளைக்கோள் என்ற நச்சுத்தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து உஸ்பெகிஸ்தான் அரசு நாடு முழுவதும் உள்ள மருந்தகங்களில் இருந்து டாக்-1 மாக் மருந்துகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. உஸ்பெகிஸ்தான் அரசின் குற்றச்சாட்டை தொடர்ந்து இந்திய அரசு சார்பில் மருந்துகளை ஆய்வு செய்ய விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன் கடந்த அக்டோபர் மாதம் மேற்கு ஆப்பிரிக்க நாடான கம்பியாவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நச்சுத்தன்மை கொண்ட தரமாற்ற 4 இரும்பல் மருந்துகள் உட்கொண்ட 66 குழந்தைகள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து ஐநா சுகாதார அமைப்பு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
English Summary
18 children died after consuming cough indian medicine