சவூதி அரேபியாவில் கனமழை - இரண்டு பேர் பலி.!
2 dead as heavy rain hit Saudi Arabia
கடலோர நகரமான ஜித்தா உட்பட மேற்கு சவுதி அரேபியாவில் பெய்த கனமழை காரணமாக இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சவூதி வானிலை மையம் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடலோர நகரமான ஜித்தா உட்பட மேற்கு சவுதி அரேபியாவில் உள்ள சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த கனமழை பெய்து வருகிறது. இதனால் விமானங்கள் தாமதமானது. மேலும் நாள் முழுவதும் மழை தொடரும் என்று முன்னறிவிக்கப்பட்டதால், நகரத்தில் உள்ள பள்ளிகள் தற்காலிகமாக மூடப்படும் என்று சவூதியின் அதிகாரப்பூர்வ பத்திரிகை நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மில்லியன் கணக்கான மக்கள் ஹஜ் மற்றும் உம்ரா யாத்திரைகளை மேற்கொள்ளும் இஸ்லாமியர்களின் புனித நகரமான மெக்காவை அடைவதற்குப் பயன்படுத்தும் சாலை, மழையால் மூடப்பட்டுள்ளது.
மேலும் ஜித்தாவில் பெய்த மழையின் அளவு, 2009ல் பதிவான மழை அளவை விட அதிகமாக இருப்பதாக, தேசிய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
2 dead as heavy rain hit Saudi Arabia