நேபாளத்தில் அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம்.!
2 earthquakes of 4 point 4 and 5 magnitudes hit Nepal
நேபாளத்தில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இது ரிட்டர் அளவில் 4.4 மற்றும் 5.0ஆக பதிவாகியுள்ளது. இதில் 4.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் நேற்று இரவு 11.43 மணி அளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 5.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று 1.15 மணி அளவில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.
மேலும் இந்த நிலநடுக்கங்கள் பாஜுராவை மையம் கொண்டிருந்தது என்று தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இதற்கு முன்பாக ஏப்ரல் 1-ம் தேதி நேபாளத்தின் காத்மாண்டுவில் 3.5 மற்றும் 4.5 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
English Summary
2 earthquakes of 4 point 4 and 5 magnitudes hit Nepal