கடும் காற்று மாசுபாடு - 2 லட்சத்திற்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதி.!
2 lakh people hospitalized as severe air pollution in Thailand
தெற்காசிய நாடான தாய்லாந்தில் கடந்த ஒரு மாத காலமாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இதற்கு, குளிர் காலங்களில், விவசாய கழிவுகள் எரிப்பு, சாலை போக்குவரத்து மற்றும் தொழிற்சாலைகளால் அதிகளவு வெளியிடப்படும் புகை முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், அதிகரித்து வரும் காற்று மாசுபாட்டால் 1.3 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் சுவாச பிரச்சினையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தலைநகர் பாங்காங் உட்பட 100 பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து காற்று மாசுபாட்டால் அதிக அளவு பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வீட்டிலிருந்தே பணிகளை மேற்கொள்ளுமாறும், ஜன்னல்களை மூடியே வைக்குமாறும் மக்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் காற்று மாசுபாட்டால் தாய்லாந்தின் சுற்றுலாத்துறை கலையிழந்து வருவதாகவும், கடந்த இரண்டு மாதங்களில் சுற்றுலாத் துறையினரின் வருகை 70% வீழ்ச்சி அடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
English Summary
2 lakh people hospitalized as severe air pollution in Thailand