இந்தோனேசியாவில் செமேரு எரிமலை வெடிப்பு.! 2,000 பேர் வெளியேற்றம்.! - Seithipunal
Seithipunal


இந்தோனேசியா ஜாவா தீவின் கிழக்கே உள்ள லுமாஜாங் நகரில் அமைந்துள்ள இந்தோனேசியாவின் மிகப்பெரிய எரிமலை செமேரு நேற்று அதிகாலை திடீரென வெடித்து 15 கிமீ தொலைவில் சாம்பல் மேகத்தை உமிழ்ந்தது. இந்த எரிமலை வெடிப்பினால் அப்பகுதியில் உள்ள மக்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து எரிமலை சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்கும்படி அந்த நாட்டின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. மேலும் இந்த எரிமலை வெடிப்பினால் கிட்டத்தட்ட 2,000 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அங்குள்ள ஆறுகளில் எரிமலை குழம்புகள் மிதந்துவரும் வாய்ப்புகள் உள்ளதால், ஆற்றுப்படுகைகளிலிருந்து 500 மீட்டர் தள்ளியே இருக்கும்படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

மேலும் இந்தோனேசியாவின் எரிமலை மற்றும் புவியியல் அபாயத் தணிப்பு மையம், எரிமலைச் செயல்பாட்டின் அளவு மிக உயர்ந்த நிலைக்கு உயர்த்தியுள்ளதால் செமேருவின் வெடிப்பு மையத்திலிருந்து 8 கிமீ (5 மைல்) தொலைவில் உள்ள மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு 12,060 அடி உயரம் கொண்ட செமேரு எரிமலை வெடித்ததில் 50-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர் மற்றும் ஆயிரக்கணக்கானவர்கள் அங்கிருந்து இடம் பெயர்ந்தது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2000 people evacuated due to volcano eruption in Indonesia Java island


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->