காசாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து - 7 குழந்தைகள் உட்பட 21 பேர் பலி - Seithipunal
Seithipunal


காசாவில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 7 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாலஸ்தீனம் காசாவின் வடக்கே ஜபாலியா பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் எரிபொருள் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஒரு வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயானது கொழுந்துவிட்டு எரிந்து மளமளவென அடுக்குமாடி கட்டிடம் முழுவதும் பரவியது.

மேலும் இந்த தீ விபத்தால் கரும்புகை வெளியேறி அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இந்நிலையில் இந்த தீவிபத்தில் மூச்சுத்திணறி மற்றும் உடல் கருகி 7 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்துள்ளனர். 

இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் இந்த தீ விபத்தில் பலர் காயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக உள்ளூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

இந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், தேசிய அளவில் துக்கம் அனுசரிக்கப்படும் என்றும், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

21 people including 7 children killed in Gaza apartment fire


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->