ஜெருசலேமில் கண்டுபிடிக்கப்பட்ட தங்க மோதிரம்.. இதன் வயது 2300 ஆண்டுகளாம்..!! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் நாட்டில் உள்ள ஜெருசலேம் மிகவும் புராதனமான நகரங்களில் ஒன்றாகும். இங்கு இஸ்லாம், கிறிஸ்தவம் மற்றும் யூத மதத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இஸ்ரேல் மட்டுமல்லாது பாலஸ்தீனியர்களுக்கும் ஜெருசலேம் நகரம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்நகரம் யூதேய மலைப்பகுதியில் சாக்கடலின் வடக்கு கரைப்பகுதிக்கும், மத்திய தரைக்கடலுக்கும் இடையில் அமைந்துள்ள மிகவும் புராதனமான புனித நகரமாகும். மேலும் இந்நகரின் நீண்டகால வரலாறு இந்நகரம் இருமுறை அடியோடு அழிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டதாக தெரிவிக்கிறது.

இந்த ஜெருசலேம் நகரம் 5000 வருட பழமையான வரலாற்றைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் பைபிளின் புதிய ஏற்பாட்டின்படி இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகருக்கு வெளியில் தான் சிலுவையில் அறையப்பட்டு இறந்தார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது 2300 ஆண்டுகால பழமையான சிவப்புக்கல் பதித்த தங்க மோதிரம் ஒன்று ஜெருசலேமில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின் தொல்பொருள் ஆணையம் கூறியுள்ளது. மேலும் இது பண்டைய கால மக்களின் செல்வச்செழிப்பை பறை சாற்றுவதாக உள்ளதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

2300 Old Gold Ring Found in Jerusalem


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->