கிரீஸில் 2 ரயில்கள் மோதி பயங்கர விபத்து - 26 பேர் பலி, 85 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


வடக்கு கிரீஸில் இரண்டு ரயில்கள் மோதிய பயங்கர விபத்தில் 26 பேர் உயிரிழந்தனர் மற்றும் 85 பேர் காயமடைந்துள்ளனர்.

ஏதென்ஸிலிருந்து வடக்கு நகரமான தெசலோனிகிக்கு நோக்கி 350க்கும் மேற்பட்டவர்களுடன் பயணிகள் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்பொழுது மத்திய கிரீஸின், லாரிசா நகருக்கு அருகே, டெம்பி பகுதியில் தெசலோனிகியில் இருந்து லாரிசாவு நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயிலும், பயணிகள் ரயிலும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. மேலும் 2 ரயில் பெட்டிகள் தீப்பிடித்து எரிந்து அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்துள்ளது.

இதையடுத்து இந்த விபத்து குறித்த தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புக்கு உரியவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பயங்கர விபத்தில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 85 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் சுமார் 250 பயணிகள் பேருந்துகளில் தெசலோனிகிக்கு பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக பிராந்தியத்தின் ஆளுநர் கான்ஸ்டான்டினோஸ் அகோரஸ்டோஸ் தெரிவித்துள்ளார். இதையடுத்து மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

26 dead 85 injured as two trains collide in Greece


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->