பிரேசில்: சிறையில் பயங்கர தீ விபத்து - 3 பேர் பலி, 43 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal


தெற்கு பிரேசிலில் உள்ள சிறையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் 43 பேர் காயமடைந்துள்ளனர்.

பிரேசில் சான்டா கேடரினா மாநிலத்தில் உள்ள புளோரியானோபோலிஸ் சிறைச்சாலையில் நேற்று முன்தினம் திடீரென தீ பிடித்து மற்ற இடங்களுக்கும் பரவத் தொடங்கியது. இதையடுத்து இந்த தீ விபத்து குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த தீயணைப்பு குழுவினர், விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் இந்த பயங்கர தீ விபத்தால் ஏற்பட்ட கரும்பு புகையை சுவாசித்த மூன்று கைதிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 

இதையடுத்து 43 பேர் காயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த தீ விபத்தானது ஒரு அறையில் உள்ள மெத்தையில் தீ ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று தண்டனை விவகார ஆணையத்தின் தலைவர் வில்லியம் ஷின்சாடோ தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இந்த தீ விபத்து குறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

3 killed 43 injured in Brazil prison fire


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->