தென் ஆப்பிரிக்கா : தங்கச் சுரங்கத்தில் பயங்கர வெடிவிபத்து - 31 பேர் பலி - Seithipunal
Seithipunal


தென் ஆப்பிரிக்காவில் அழிந்து வரும் கனிம வளங்களை பாதுகாப்பதற்காக  சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் ஏராளமான தங்கச் தங்கச் சுரங்கங்களை அரசாங்கம் மூடி வருகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவின் ஃப்ரீ ஸ்டேட் மாகாணத்தில் பயன்படுத்தப்படாத தங்கச் சுரங்கத்தில் வெடிவிபத்து ஏற்பட்டதில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக காவல்துறை ஆய்வாளர்கள் கூறும் பொழுது, 1990-களில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட இந்த சுரங்கத்தில் அவ்வப்போது சட்டவிரோதமாக கனிம படிவங்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் சுரங்கப் பணியின் போது எதிர்பாராமல் நடந்த வெடிவிபத்தினால் 31 பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக 16 பேர் காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளதாகவும், 2 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் விபத்து ஏற்பட்ட சுரங்கப் பகுதி மிகவும் அபாயகரமானது என்பதால் மீட்டுப்பணிகள் தாமதமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே சுரங்கத்தில் மீத்தேன் வாயு கசிவினால் வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் கடந்த மே மாதம் 18ஆம் தேதி நடந்த இந்த வெடிவிபத்து தற்பொழுது தான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

31 died as blast in gold mine in south africa


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->