புயலில் சிக்கிய தாய்லாந்து போர்க்கப்பல்.! 31 பேர் மாயம்.!
31 missing in Thailand Navy ship sinks in Storm
தாய்லாந்து வளைகுடாவில் நேற்று இரவு ஏற்பட்ட புயலில் சிக்கி தாய்லாந்து கடற்படை கப்பல் கவிழ்ந்து நீரில் மூழ்கியது.
மத்திய தாய்லாந்தில் உள்ள பேங் சபான் மாவட்டத்தின் கடற்பகுதியில் இருந்து சுமார் 32 கிமீ (20 மைல்) தொலைவில் வளைகுடா பகுதியில் தாய்லாந்து கடற்படைக்குச் சொந்தமான கப்பல் வழக்கமான ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தது.
இந்த போர் கப்பலில் கடற்படை வீரர்கள் உள்பட 106 பேர் பயணித்த நிலையில், நேற்று இரவு 11.30 மணியளவில் திடீரென கடலில் புயல் காற்று வீசியதால் கடற்படை கப்பல் கவிழ்ந்து தண்ணீரில் மூழ்கியது. இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து, மூன்று கடற்படைக் கப்பல்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டது.
இந்த மீட்புப்பணியில் போர் கப்பலில் இருந்த 75 பேர் மீட்டனர். மேலும் கடலில் மூழ்கி 31 பேர் மாயமாகிய நிலையில், அவர்களை தேடும் பணியில் தீவிரமாக மீட்டுக் குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
English Summary
31 missing in Thailand Navy ship sinks in Storm