அமெரிக்காவில் மீண்டும் காட்டுத்தீ - 31 ஆயிரம் பேர் உடனடியாக வெளியேற உத்தரவு! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் சமீபத்தில் தான் இரண்டு மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், தற்போது மீண்டும் காட்டுத்தீ பரவி வருவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் மீண்டும் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளதால் பல்லாயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் காஸ்டாயிக் ஏரியின் அருகில் உள்ள மலைப்பகுதியில் வேகமாக பரவிய காட்டுத்தீ கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குள் 8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டது என தகவல் வெளியாகியுள்ளது  .இதே பகுதியில் சமீபத்தில் தான் இரண்டு மிகப்பெரிய காட்டுத்தீ சம்பவங்கள் அரங்கேறிய நிலையில், தற்போது மீண்டும் காட்டுத்தீ பரவி வருவது மக்களுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

பலத்த காற்று காட்டுத்தீயின் தீவிரத்தை அதிகப்படுத்த முயல்வதால் , அந்தப் பகுதி முழுக்க புகை சூழ்ந்து காணப்பட்டது. மேலும், தீ அதிக இடங்களுக்கு பரவும் என்று தெரிகிறது.இதனால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.மேலும் புதிதாக பரவி வரும் காட்டுத்தீ காரணமாக சாண்டா கிளாரிட்டா அருகில் அமைந்துள்ள ஏரியை சுற்றி வசிக்கும் 31 ஆயிரம் பேரை வெளியேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ஹியூஸ் தீ என்று அழைக்கப்படும் புதிய தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் என்றும்  லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி ஷெரிப் துறையைச் சேர்ந்த ராபர்ட் ஜென்சன் வலியுறுத்தினார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் காட்டுத்தீ பரவாமல் இருக்க ஹெலிகாப்டர்கள் மற்றும் விமானங்கள் சம்பவ இடத்தில் தண்ணீர்  மற்றும் தீயை தடுக்கும் மருந்துகளை தீயில் ஊற்றிக்கொண்டிருந்தன என்றும் லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்டி தீயணைப்புத் துறை மற்றும் ஏஞ்சல்ஸ் தேசிய வனப்பகுதியைச் சேர்ந்த குழுவினரும் தரையில் இருந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும் அமெரிக்க ஊடகங்கள் தெரிவித்துள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

31,000 people ordered to evacuate as wildfires erupt in US


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->