இத்தாலி : கொத்தடிமைகளாக இருந்த 33 இந்தியர்கள் மீட்பு - மேலும் கை துண்டிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழப்பு..!! - Seithipunal
Seithipunal



இத்தாலியில் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட 33 இந்தியர்களை இத்தாலிய அதிகாரிகள் மீட்டுள்ளனர். இவர்கள் அங்குள்ள விவசாய நிலங்களில் கொத்தடிமைகளாகப் பணியாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. 

இத்தாலி நாட்டில் உள்ள வெரோனா மாகாணத்தில் உள்ள ஸ்ட்ராபெர்ரி பழத்தோட்டம் ஒன்றில் இந்தியாவைச் சேர்ந்த சத்தன் சிங் (31) பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் பணியில் இருந்தபோது  சத்தன் சிங்கின் கை இயந்திரத்தில் சிக்கி துண்டிக்கப் பட்டுள்ளது. ஆனால் அவருக்கு உரிய சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யாமல் அவரை அப்படியே சாலையோரத்தில் அவரது முதலாளிகள் விட்டுச் சென்றதால், அவர் உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவத்தையடுத்தே இத்தாலியில் உள்ள பல்வேறு பண்ணைகளில் இந்தியர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்படுவது குறித்து வெளியில் தெரிய வந்தது. இவர்கள் அனைவரும் வாரத்தில்  7 நாட்களும் 10 முதல் 12 நேரம் வரை பணியில் ஈடுபடுத்தப்படுவதும், இவர்களுக்கு கூலியாக இந்திய மதிப்பில் ஒருநாளைக்கு ரூ. 360 மட்டும் வழங்கப்படுவதும் தெரிய வந்துள்ளது. 

முன்னதாக இவர்களை ரூ. 15 லட்சத்திற்கு இந்திய ஏஜெண்டுகள் ஏமாற்றி சீசனல் ஒர்க்கர் பெர்மிட்டில் இத்தாலி அழைத்துச் சென்றுள்ளதும், அந்த 15 லட்சத்தை கழிக்கும் வரை இவர்களுக்கு சம்பளம் கிடைக்காது என்றும், மேலும் கூடுதலாக ரூ. 12 லட்சம் கட்டினால் இத்தாலியில் நிரந்தர பெர்மிட் கிடைக்கும் என்றும் ஏஜென்ட்டுகள் ஏமாற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. 

அந்த வகையில் தற்போது அங்கு கொத்தடிமைகளாகப் பணியாற்றி வந்த 33 இந்தியர்களை இத்தாலிய அதிகாரிகள் மீட்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகள் அனைத்தையும் செய்து கொடுப்பதாக உறுதியளித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

33 Inidans Worked as Slaves in Italian Farms Were Rescued By Italian Officers


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->