ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளவது அவசியம்.! இந்தியா உள்ளிட்ட 34 நாடுகள் வலியுறுத்தல்.! - Seithipunal
Seithipunal


வளர்ந்து வரும் நாடுகளின் எதிர்கால திட்டங்கள், பாதுகாப்பு மற்றும் விருப்பங்கள் ஆகியவற்றை வெளிப்படுத்த ஐநா சபையில் தேவையான சீர்திருத்தங்களை செய்ய வேண்டுமென இந்தியா உள்ளிட்ட 34 நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

இந்நிலையில் இந்தியா, பிரேசில், வங்கதேசம் ,தென் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்கா நாடுகள் சீர்திருத்தம் தொடர்பான கடிதத்தை ஐநா சபையில் அளித்துள்ளது.

இந்த கடிதத்தில், ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிகழ்காலத்திற்கு ஏற்றவாறு சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்றும், பன்னாட்டு சந்தைகளில் நிலவி வரும் பொருளாதார சவால்கள், பயங்கரவாதம், வறுமை, உணவு பாதுகாப்பு, தொற்று நோய் பரவல் போன்ற பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் படி சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு கவுன்சிலில் போதியளவு முன்னேற்றம் இல்லாதது உலக நாடுகளில் பாதுகாப்பு மற்றும் ஐநா சபையின் கொள்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு கவுன்சிலின் சீர்திருத்ததற்கு ஒன்று சேர்வதற்காக அனைத்து ஐக்கிய நாடுகளுக்கும் 34 நாடுகள் அழைப்பு விடுத்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

34 countries urge to make reforms in UN security council


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->