3ம் உலகப் போர்.. தயாராகும் நாடுகள்.. அச்சத்தில் உலக நாடுகள்.!!
3rd world war
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான போர் 15 நாட்களைக் கடந்து உள்ளது. இந்தப் போரில் இரு நாடுகளை சேர்ந்த பொதுமக்கள், வீரர்கள் என பலர் உயிரிழந்துள்ளனர். பல்வேறு நாடுகளை சேர்ந்த லட்சக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். மேலும், உக்ரைன் மக்களும் அகதிகளாக வெளியேறி வருகின்றனர்.
ரஷ்யப் படைகள் உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஏவுகணை தாக்குதல், வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதல் நடத்தி வருகிறது. அதே நேரத்தில் உக்ரைன் படைகளும் ரஷ்யாவிற்கு பதிலடி கொடுத்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து வருகின்றனர்.
இந்நிலையில், ரஷ்யா - உக்ரைன் போர் உக்கிரமடைந்த நிலையில், அமெரிக்காவும், சீனாவும் தனித்தனியாக போர் ஒத்திகையில் ஈடுபடுவதால், மூன்றாம் உலகப் போர் குறித்த அச்சம் உலக நாடுகள் மத்தியில் நிலவுகிறது.