மலேசியா: தொடர் கனமழையால் வெள்ளப்பெருக்கு - 40,000 பேர் முகாம்களில் தஞ்சம்
40000 people take shelter due to flood in Malaysia
தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் கடந்த இரண்டு வாரங்களாக பெய்த கனமழையினால் யோங் பெங்க், ஜோகூர், பகாங்க், செகாமட் நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான நகரங்களின் சாலைகள் மற்றும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. மேலும் கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
தாழ்வான பகுதிகள் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் மக்கள் பாலங்கள் மற்றும் வீடுகளின் கூரைகளின் மேல் தஞ்சம் அடைந்துள்ளனர். இந்நிலையில் ஜோகூர் மாகாணம் முழுவதும் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் 40,000க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டு, 200க்கும் மேற்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளப்பெருக்கினால் ஜோகூர் மாகாணத்தில் மட்டும் இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் வரும் நாட்களில் பெரும்பாலும் தென் மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
English Summary
40000 people take shelter due to flood in Malaysia