ஆல்ப்ஸ் மலைத்தொடரில் பயங்கர பனிச்சரிவு - 5 பேர் பலி, 9 பேர் படுகாயம் - Seithipunal
Seithipunal


ஐரோப்பாவின் மிக உயரமான மற்றும் நீளமான ஆல்ப்ஸ் மலைத்தொடர் சுமார் 7 நாடுகளில் பரந்து விரிந்து  காணப்படுகிறது. மேலும் இந்த மலைத்தொடரின் உயரமான சிகரமான மோன்ட் பிளாக், அல்பைன்ஸ் லேக் பிரபல சுற்றுலா தலமாக விளங்குகிறது.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு ஆல்ப்ஸ் மலையின் அர்மான்செட் பகுதியில் சுற்றுலா பயணிகள் பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தனர். அப்பொழுது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பனிச்சரிவில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சிக்கினர்.

இதைத்தொடர்ந்து தகவலறிந்து விரைந்த மீட்பு படையினர், ஹெலிகாப்டர்கள், நாய்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உதவியுடன் மீட்பு பணிகளை மேற்கொண்டனர். இந்த பனிச்சரிவில் சிக்கி இதுவரை 2 வழிகாட்டிகள் மற்றும் 3 சுற்றுலா பயணிகள் உயிரிழந்ததாகவும், 9 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் இறந்தவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் தெரியவில்லை என்றும், பனியில் புதையுன்று காணாமல் போயுள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என தெரிவித்துள்ளனர். இந்த விபத்து குறித்து பிரான்ஸ் அதிபர் மேக்ரான் மற்றும் உள்துறை அமைச்சர் ஜெரால்டு டார்மான் தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 died in alps mountain range in France


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->