பிரான்சில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.! ரிக்டர் அளவில் 5.8ஆக பதிவு...! - Seithipunal
Seithipunal


பிரான்சில் 5.8 ரிக்டர் அளவில் நேற்று மாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று பிரெஞ்சு மத்திய நில அதிர்வுப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் வடக்கில் ரென்னெஸ் மற்றும் தென்மேற்கில் உள்ள போர்டியாக்ஸ் வரை உணரப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கம் நிலப்பரப்பில் பதிவு செய்யப்பட்ட வலுவான நிலநடுக்கங்களில் ஒன்று என்று மந்திரி கிறிஸ்டோஃப் பெச்சு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இந்த நிலநடுக்கத்தால் ஒருவர் லேசான காயமடைந்தார். கட்டிடங்களில் இருந்து கல் விழுந்தது என்றும், சுவர்களில் விரிசல்கள் தோன்றியதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த நிலநடுக்கத்தால் மின்கம்பிகள் அருந்து விழுந்ததில் 1,100 வீடுகளை இருளில் மூழ்கின. இந்நிலையில் இந்த நிலநடுக்கம் குறித்து டூர்ஸில் வசிக்கும் சட்டக்கல்லூரி மாணவி லியா ஃபிராங்கே கூறும்பொழுது, "தான் படிக்கும் போது அபார்ட்மெண்ட் குலுங்கியது. சில நொடிகள் இது நீடித்தது. 3-வது மாடியில் இருந்த நான் இதனால் மிகவும் பயந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

5 point 8 magnitude earthquake hits France


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->