51 பேருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி.!!
51 monkey pox in france
உலகளவில் குரங்கு அம்மை நோய் தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிரான்சில் 51 பேருக்கு குரங்கு அம்மை நோய் தொற்று கண்டறியப்பட்டு உள்ளது என பிரான்சில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குரங்கு அம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட அனைவரும் 22 முதல் 25 வயதுக்குட்பட்ட ஆண்கள் என்றும், ஒருவர் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாகும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
குரங்கு அம்மை நோய் தொற்று அறிகுறிகளாக அடிக்கடி காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு மற்றும் கை, முகத்தில் சின்னம்மை போன்ற சொறி மூலம் வெளிப்படுகிறது. குரங்கு அம்மை குறித்து உலக சுகாதார அமைப்பு கூறியதாவது, இந்த நோய் பொதுவாக 2 முதல் 4 வாரத்திற்கு பிறகு சரியாகிவிடும் என தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மை நோய் தொற்று குறித்து பிரான்ஸ் சுகாதார அமைப்பு கூறியதாவது, இது போன்ற நோய் தொற்றை எதிர்பார்த்ததில்லை. நாட்டில் போதுமான தடுப்பூசியை இருப்பு இருப்பதாக கூறியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட நபர்கள் தொடர்பு கொண்ட பெரியவர்கள், சுகாதார வல்லுனர்கள் உட்பட அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு பிரான்ஸ் அரசு பரிந்துரை செய்துள்ளது.