தாலிபான் ஆட்சி.. 53 சதவீத பத்திரிகையாளர்கள் வேலை இழப்பு.! - Seithipunal
Seithipunal


ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றிய பிறகு தனது ஷிரியா கொள்கையின் கடுமையான சட்டங்களை இயற்றி, கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் பெண்களின் கல்விக்கு கடை, வேலை செய்வதற்கு தடை என பெண் சுதந்திரம் முற்றிலும் மறுக்கப்பட்டு வருகிறது.

இதைத் தொடர்ந்து மக்களிடையே பொது நிகழ்ச்சிக்கு தடை, செய்தி நிறுவனங்களில் பேட்டி மற்றும் கலந்துரையாடுவதற்கு தடை என பத்திரிக்கை சுதந்திரம் மற்றும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக பல சட்டங்கள் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டன.

இதனால் நிறுவன ஊழியர்கள் மற்றும் பத்திரிக்கை தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. இது தொடர்பாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கையில், தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைத்த பின் இதுவரை 53 சதவீத பத்திரிக்கையாளர்கள் வேலை இழந்ததாகவும், 50 சதவீத செய்தி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தாலிபன்களின் நடவடிக்கைக்கு எதிராக கருத்து தெரிவித்த பத்திரிக்கையாளர்கள் மீது 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

53 percent of journalists lost their jobs in Afghanistan


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->