பாரம்பரியமிக்க நினைவு சின்னங்களை சேதப்படுத்தினால்.. 54 லட்சம் அபராதம்.! - Seithipunal
Seithipunal


ஐரோப்பிய நாடான இத்தாலியில் அவ்வப்போது நடைபெறும் போராட்டங்கள் மற்றும் கலவரங்களில் பாரம்பரியமிக்க நினைவு சின்னங்கள், நீரூற்றுகள் மற்றும் கட்டிடங்கள் சேதப்படுத்தப்படுகின்றன. சேதமடைந்த நினைவுச் சின்னங்களை சீரமைக்க ஆண்டுதோறும் அரசுக்கு கோடிக்கணக்கில் செலவாகிறது.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க சுற்றுலா பயணிகள் ஓட்டிச் சென்ற மின்சார ஸ்கூட்டர்கள் இடித்ததில் புகழ்பெற்ற ஸ்பானிஷ் பளிங்கு 29 படிக்கட்டுகள் சேதமடைந்தன. மேலும் படிக்கட்டுகளை சீரமைக்க சுமார் 21 லட்சம் செலவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுச்சத்துக்களை சேதப்படுத்திய குற்றத்திற்காக 2 அமெரிக்க சுற்றுலா பயணிகளுக்கு தலா 35000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இது தொடர்பாக பேசிய இத்தாலியின் கலாசார அமைச்சர் ஜெனாரோ சாங்கியுலியானோ, இனிவரும் காலங்களில் பிரதான நினைவுச் சின்னங்கள் மற்றும் கட்டிடங்களை சேதப்படுத்துபவர்களுக்கு 9 லட்சம் முதல் 54 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும், அதற்கான சட்டங்கள் விரைவில் இயற்றப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

54 lakhs fine imposed if monuments damaged


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->