அச்சுறுத்தும் பிபோர்ஜாய் புயல்: பாகிஸ்தானில் 57 ஆயிரம் பேர் வெளியேற்றம்...! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர புயல் பிபோர்ஜாய் வடக்கு திசையில் மெதுவாக நகர்ந்து இன்று காலை வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில், ஐக்காவு துறைமுகத்திலிருந்து (குஜராத்) மேற்கு தென்மேற்கே சுமார் 280 கிலோமீட்டர் தொலைவிலும், தேவ்பூமி துவாரகா (குஜராத்) இருந்து மேற்கு-தென்மேற்கே சுமார் 290 கிலோமீட்டர் தொலைவிலும் தொலைவில் நிலை கொண்டுள்ளது. 

இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து சௌராஷ்டிரா- கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் 15ஆம் தேதி அன்று மாலை, மிகத்தீவிர புயலாக. மாண்டிவி (குஜராத்) மற்றும் கராச்சி (பாகிஸ்தான்) இடையே, ஜக்காவு துறைமுகம் (குஜராத்) அருகே கரையை கடக்கக்கூடும். 

அப்போது காற்றின் வேகம் மணிக்கு 150 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாகிஸ்தானில், பலுசிஸ்தானின் கடலோரப் பகுதிகளிலும், ஹைதராபாத், ஷாஹீத் பெனாசிராபாத், சுக்கூர் மற்றும் சங்கர் உள்ளிட்ட பகுதிகளில் கடற்படை மற்றும் அவசரகால மருத்துவக் குழுக்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

மேலும் அரசு பள்ளிகள், கல்லூரிகள் என பல இடங்களில் 37 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன மற்றும் இதுவரை 56,985 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். இதில் 22, 000க்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

57 thousand Pakistan People evacuated for biborjoi cyclone


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->