கானாவில் தங்க சுரங்கத்தில் பயங்கர நிலச்சரிவு - 7 பேர் உயிரிழப்பு
7 died as landslide in gold mine in ghana
மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் சட்டத்திற்கு புறம்பாக, உரிமம் பெறாமல் பல்வேறு தங்கச் சுரங்கங்கள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் கானாவின் கிழக்கு பகுதியான சின்குவாவில் சட்டத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் தங்கச் சுரங்கத்தில் ஊழியர்கள் தங்கம் வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக சுரங்கத்தின் மேற்பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சுரங்கப் பணியாளர்கள் மண்ணிற்குள் புதைந்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.
இதுதொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை அமைப்பின் இயக்குனர் ஆல்ஃபிரட் அகிமாங் பேசும் பொழுது, இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாகவும், மேலும் 3 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உரிமம் பெறாமல் இயங்கி வரும் தங்கச் சுரங்கங்களில் முறையான பாதுகாப்பு விதிகளை பின்பற்றாததே பெரும்பாலான விபத்துகளுக்கு காரணம் என்று தெரிவித்துள்ளார்.
English Summary
7 died as landslide in gold mine in ghana