ஹங்கேரியாவில் ஆளில்லாத ரயில் பாதையை கடக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலி - Seithipunal
Seithipunal


ஹங்கேரியாவில் ஆளில்லாத ரயில் பாதையை கடக்கும்போது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மத்திய ஐரோப்பா நாடான ஹங்கேரியாவின் தெற்கு பகுதியான குன்பெஹெர்டோ கிராமத்திற்கு அருகே வாகனம் ரயில்வே பாதையை கடக்க முயன்ற பொழுது ரயில் மோதியதில் பெரும் விபத்து ஏற்பட்டது.

இதில் அதிவேகமாக ரயில் மோதியதில் வாகனம் சில மீட்டர் தூரத்திற்கு இழுத்து செல்லப்பட்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வாகனத்தின் ஓட்டுநர் மற்றும் அதில் இருந்த 6 பயணிகளும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக  தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரயிலில் பயணித்தவர்களுக்கு காயம் ஏற்படவில்லை எனவும், ரயிலின் ஓட்டுநர் சிறு காயங்களுடன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீஸ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ரயில் கடக்கும் பாதையில் கேட் மற்றும் சிக்னல் இல்லாததே விபத்திற்கான  காரணம் என்று தகவல் வெளியாகி உள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 died in train collide with vehicle in Hungary


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->