பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை மோதல்.! 7 பேர் பலி, 31 பேர் காயம்
7 killed 31 injured Pakistan Afghanistan Border Clashes
பாகிஸ்தானுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான எல்லை பகுதியில் ஏற்பட்ட மோதலில் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 31 காயமடைந்தனர்.
ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணத்தை ஒட்டிய தென்மேற்கு எல்லை நகரமான பாகிஸ்தானின் ஷாமென் பகுதி எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் இருநாட்டு பாதுகாப்பு படையினரும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தான் படையினர் லாலா முகமது கிராமத்தில் உள்ள எல்லைப்பகுதியில் பீரங்கியால் குண்டு வீசியும், துப்பாக்கிச்சூடு நடத்தியும் திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த பயங்கர தாக்குதலில் பாகிஸ்தானை சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர் மற்றும் 21 பேர் காயமடைந்தனர்.
காயமடைந்தவர்களில் ஏழு பேர் மோசமான நிலையில் இருப்பதாகவும் இவர்கள் மாகாண தலைநகரான குவெட்டாவில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த பாகிஸ்தான் வீரர்கள் பதில் தாக்குதல் நடத்தியதில் ஆப்கானிஸ்தானில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 10 பேர் காயமடைந்துள்ளனர்.
English Summary
7 killed 31 injured Pakistan Afghanistan Border Clashes