டோங்காவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.! ரிக்டர் அளவில் 7.6ஆக பதிவு.! - Seithipunal
Seithipunal


பசிபிக் தீவு நாடான டோங்காவில் அதிகாலை 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் ஹிஹிஃபோவின் நரின் மேற்கு-வடமேற்கில் 95 கிலோமீட்டர் தொலைவில் அதிகாலை 4 மணிக அளவில் ஏற்பட்டுள்ளது. மேலும் பூமிக்கு அடியில் 210 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்த இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் உள்ளிட்ட கட்டிடங்கள் குலுங்கின.

இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறினார். இருப்பினும், இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதங்கள் அல்லது பொருள் சேதங்கள் குறித்த எந்த தகவலும் இதுவரை வெளியாகவில்லை. மேலும் நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை எதுவும் இல்லை என்று அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 point 6 magnitude earthquake hits Tonga


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->