உலக இராணுவ டிரையத்லான் சாம்பியன்ஷிப் போட்டி... 7 இலங்கை வீரர்கள் மாயமானதாக தகவல்.! - Seithipunal
Seithipunal


24வது உலக இராணுவ டிரையத்லான் சாம்பியன்ஷிப் போட்டி பிரான்சின் பிரைவ்-லா-கெய்லார்டே பகுதியில் நடைபெற்றது. சுமார் 22 நாடுகளின் முப்படைகளைச் சேர்ந்த வீரர்கள் போட்டியில் பங்கேற்றனர்.

இந்நிலையில் டிரையத்லான் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக பிரான்ஸ் சென்ற இலங்கை வீரர்களில் 7 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில்,

முப்படைகளைச் சேர்ந்த 5 ஆண்கள் மற்றும் 5 பெண் ராணுவ வீரர்கள் மே 4ஆம் தேதி பிரான்சுக்கு சென்றதாகவும், போட்டி முடிந்த பின்பு தலைமை அதிகாரி மதிய உணவிற்கு செல்லும் நேரத்தில் ஏழு பேர் கொண்ட குழு தங்கும் இடத்திலிருந்து தப்பிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தப்பிச் சென்றவர்களில் 4 பேர் ராணுவப்படையையும், 2பேர் விமானப்படையையும், ஒருவர் கடற்படையையும் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ராணுவ வீரர்கள் பிரான்சில் வேலை தேடுவதற்காக தப்பிச் சென்றுள்ளதாக அதிகாரிகள் சந்தேகித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

7 srilanka soldiers missing in world triathlon championship in france


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->