ஆஸ்திரியா || பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழப்பு.!
8 died in Austria due to avalanche
ஆஸ்திரியாவின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவுகளில் சிக்கி எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவில் கடந்த இரண்டு நாட்களாக பனிப்பொழிவு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் டைரோல் மற்றும் வோரல்பேர்க் மாகாணங்களில் மட்டும் ஒரே நாளில் 30க்கும் மேற்பட்ட இடங்களில் பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது. மேலும் பனிப்பொழிவால், குளிர்கால விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடுபவர்களை அதிக எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் ஆஸ்திரியாவில் மேற்கு பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவுகளில் சிக்கி குறைந்தது எட்டு பேர் உயிரிழந்துள்ளாதாக காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். அப்பகுதியில் எச்சரிக்கை விடப்பட்டிருந்தபோதும், சிறுவர்கள் பெரியவர்கள் உட்பட ஏராளமானோர் பனிச்சறுக்கு விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்பொழுது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 10-க்கும் மேற்பட்டோர் மாயமாகி உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் அடர்ந்த பனிக்காற்று அதிகம் வீசுவதால் மீட்பு பணிகள் தாமதப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
8 died in Austria due to avalanche