பிரேசிலின் மனாஸ் பகுதியில் நிலச்சரிவு - 8 பேர் பலி - Seithipunal
Seithipunal


பிரேசிலின் மனாஸ் நகரில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர்.

வடக்கு பிரேசிலில் உள்ள அமேசான் மாநிலத்தின் தலைநகரான மனாஸ் நகரில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்துள்ளது. இதில் வார இறுதியில் 96 மில்லிமீட்டர் கனமழை பதிவாகியுள்ளது. இது இந்த ஆண்டின் சராசரியை விட கணிசமாக அதிகமாகும். இந்த கனமழையால் மனாஸ் நகரின் கிழக்கு பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அப்பகுதியில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலச்சரிவில் ​​ஒன்பது வீடுகள் சேதமடைந்த நிலையில், 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில் ஒரு தாய் மற்றும் மகளின் உடல்கள் இடிபாடுகளுக்கு அடியில் கட்டிப்பிடிக்கப்பட்டுள்ளது. மேலும் இறந்தவர்களில் நான்கு பேர் பெரியவர்கள் என்றும், நான்கு பேர் குழந்தைகள் என்று அமேசானாஸ் மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும் அப்பகுதியில் பலர் காணாமல் போனதைத் தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

8 killed in landslide in Brazil manaus


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->