நைஜீரியாவில் இரு தரப்பினரிடையே கடும் மோதல் - 85 பேர் உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு பகுதிக்கும் கிறிஸ்தவர்கள் வாழும் தெற்கு பகுதிக்கும் பல ஆண்டுகளாக இன மற்றும் மத வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றனர். இந்நிலையில் மத்திய நைஜீரியாவின் பங்சாய் மற்றும் குபாட் ஆகிய கிராமங்களில் கால்நடை வளர்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே கடந்த 3 நாட்களாக கடும் மோதல் நடைபெற்று வருகிறது.

பழிக்கு பழி வாங்கும் நோக்கத்துடன் படுகொலைகளும் வீடுகளை எரிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85 ஆக உயர்ந்துள்ளதாக மாவட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மேலும் மோதலினால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாகவும், கலவரம் தொடர்பாக இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

85 died in clash between two villages in Nigeria


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->