இஸ்ரேல் தாக்குதலில் 9 ஐ.நா ஊழியர்கள் பலி!! - Seithipunal
Seithipunal


கடந்த அக். 6ம் தேதி முதல் இஸ்ரேல் மற்றும் ஹமோஸ் அமைப்புகள் இடையே ஏற்பட்டுள்ள போரில் தற்போது வரை இரு தரப்பிலும் சுமார் 5000க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதில் இஸ்ரேல் தரப்பில் 1200க்கும் மேற்பட்டோரும் காஜா பகுதியில் 900க்கும் மேற்பட்டோரும் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

நேற்று முன்தினம் காஜா எல்லையை கைப்பற்றிய இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து காசா நகரின் மீது விமானப்படை மூலம் குண்டு மழை பொழிந்தது. இதனைத் தொடர்ந்து காசா நகர் முழுவதும் கைப்பற்றி விட்டதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஐநா நிவாரண முகாமைச் சேர்ந்த 9 ஐ.நா ஊழியர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காஜா பகுதியில் 14 ஐ.நா நிவாரண முகாம்கள் செயல்பட்டு வரும் நிலையில் அதில் ஒரு முகம் மீது இன்று இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியதில் ஐநா ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது..


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

9 UN relief camp workers killed in Israel attack


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->