ஜப்பானை ரவுண்டு காட்டும் பாக்டீரியா - மரண பீதியில் பொதுமக்கள்.! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாண்டவம் ஆடிய நிலையில், ஜப்பானில் சமீப நாட்களாக இரண்டே நாட்களில் உயிரைக் கொள்ளும் பாக்டீரியா வைரஸ் பரவி சுமார் 977 பேரை தாக்கியுள்ளது. 

இந்த பாக்டீரியா பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு தொண்டை வறட்சி, காய்ச்சல், குறைந்த ரத்த அழுத்தம், மூட்டுகளில் வலி, வீக்கம் உள்ளிட்டவை முதலில் ஏற்படும். பின்பு மூச்சுத்திணறல் ஏற்பட்டு உடல் உறுப்புகள் செயலிழந்து இறுதியில் மரணத்துக்கு வழிவகுக்கும். 

இந்த உயிரிழப்புகள் அதிகபட்சமாக பாக்டீரியா தாக்கிய 48 மணி நேரத்துக்குள் ஏற்படும் என்று டோக்கியோ மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த நோய்த்தொற்றுகள் பிரிவு மருத்துவர் கென் கிகுச்சி தெரிவித்துள்ளார். அதிகாலை நேரத்தில் முதலில் கால் வீக்கம் ஏற்பட்டு மதியத்துக்குள் மூட்டு வரை பரவும் அளவுக்கு பாதிப்பின் வீரியம் வேகமாக இருக்கும்.

தற்போது உள்ள பாக்டீரியா பரவல் வரும் நாட்களில் வேகம் எடுத்து பாதிப்பு எண்ணிக்கை 25,000 வரை உயரும் என்று அஞ்சப்படுகிறது. மேலும், பாதிக்கப்பட்டவர்களில் 30 சதவீதம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

977 peoples affected bacteria attack in jappan


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->