7 ஆயிரம் அடி உயரத்தில் 'ஸ்கை டைவிங்' செய்த 102 வயது மூதாட்டி!
A 102 year old woman who did 'skydiving' at a height of 7,000 fee
2,100 மீட்டர் உயரத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து ஸ்கை டைவிங் செய்த 102 வயதான பிரிட்டன் பெண்மணி மெனட்டே பெய்லி.
மூதாட்டி மெனட்டே பெய்லி பிரிட்டனை சேர்ந்தவர். இவருடைய வயது 102. வயதானாலும், இவர் இளம் வயதினர் போல சாகசம் செய்து அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.
அந்த வகையில் மெனட்டே பெய்லி தனது பிறந்தநாள் அன்று ஏதாவது சாகசம் செய்து அசத்தி காட்டிவிட வேண்டும் என்று தோன்றியுள்ளது.
இந்நிலையில், அவர் பிறந்தநாளில் அவர் 2,100 மீட்டர் உயரத்தில் வானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இருந்து 'ஸ்கை டைவிங்' செய்து அசத்தினார். 7 ஆயிரம் அடி உயரத்தில் விமானத்தில் இருந்து குதித்து பிரிட்டனின் மிக வயதான ஸ்கை டைவர் ஆனார். இவர் மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்கு இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார்.
மேலும், வயதானாலும் முயற்சி செய்தால், எதையும் சாதித்து காட்டலாம் என நிரூபித்து காட்டிய 102 வயது மூதாட்டி கூறியது: 'ஸ்கை டைவிங்' செய்யும் போது கண்களை இறுக மூடிக்கொண்டேன். நான் மிகவும் வேகமாக பயணிப்பது போல் தோன்றியது. எனது செயல் வயதானவர்களை சுறுசுறுப்பாக செயல்பட வைக்கும் என நம்புகிறேன்.
முதுமையின் ரகசியம் என்ன என்று மக்கள் அடிக்கடி கேட்கின்றனர். நிச்சயமாக இது அதிர்ஷ்டம். நான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சுறுசுறுப்பாக இருக்கிறேன் என்றார்.
English Summary
A 102 year old woman who did 'skydiving' at a height of 7,000 fee