9 வயது சீன சிறுவன்.. 'கியூப்' விளையாட்டில் கின்னஸ் சாதனை..! - Seithipunal
Seithipunal


3x3x3 ரூபிக் கனசதுரத்தை ஒன்றாக சேர்ப்பது பலருக்கு சவாலாக இருக்கும். ஆனால் கியூப் விளையாட்டில் 9 வயது சீன சிறுவன் கியூபை 4.69 வினாடிகளில் சேர்த்து கின்னஸ் சாதனை படைத்துள்ளான். கடந்த 12ஆம் தேதி மலேசியாவின் கோலாலம்பூரில், யோங் ஜுன் கேஎல் ஸ்பீட்க்யூபிங் 2023 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியின் அரையிறுதியின் போது சீனாவை சேர்ந்த 9 வயது சிறுவன் யிஹெங் வாங் புதிய சாதனை படைத்தார்.

இதற்கு முன்பாக கியூப் விளையாட்டில் 4.86 வினாடிகளில் கியூபை ஒன்றாக சேர்த்த அமெரிக்காவைச் சேர்ந்த மேக்ஸ் பார்க் மற்றும் கோலாந்தைச் சேர்ந்த டைமன் கோலாசிஸ்கி ஆகியோரின் கூட்டு சாதனையை சீன சிறுவன் யிஹெங் வாங் முறியடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதில் உலக சாதனையை அமைக்க யிஹெங் 1 முதல் 5வது சுற்றுகளில், 4.35, 3.90, 4.41, 5.31 மற்றும் 6.16 ஆகிய வினாடிகளில் கியூபை தீர்க்கும் நேரத்தை பதிவு செய்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A 9 year old Chinese boy holds a Guinness record in cube game


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->