இதுக்காகவா.? நண்பனின் இறப்பை மறைத்து... 2 ஆண்டுகள் ஃப்ரீஸரில் மறைத்து வைக்கப்பட்ட உடல்.! பகீர் சம்பவம்.! - Seithipunal
Seithipunal


நண்பர் இறந்ததை மறைத்து அவரது உடலை 2 ஆண்டுகள் ஃப்ரீசரில் வைத்து பாதுகாத்து இருக்கிறார் இங்கிலாந்து சார்ந்த நபர் ஒருவர். தற்போது இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இங்கிலாந்து நாட்டின் பிர்மிங்ஹாம்  நகரைச் சேர்ந்தவர் டேமியன் ஜான்சன். இவர் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்திருக்கிறார். இவருடன்  ஜான் வெயின்ரைட் என்ற நபரும் பல ஆண்டுகளாக வசித்து வந்திருக்கிறார் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர்.

கடந்த 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஜான் உயிரிழந்துள்ளார்‌. இவர் உயிரிழந்ததை வெளியே சொல்லாமல்  அவரது உடலை ஃப்ரீசரில் வைத்து பாதுகாத்திருக்கிறார் அவரது நண்பர் ஜான்சன். மேலும் ஜானின்  பென்ஷன் பணத்தையும் இவர் பயன்படுத்தி வந்திருக்கிறார்.

ஜான் இறந்த உண்மை 2020 ஆம் ஆண்டில் தான் வெளியே தெரிந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து ஜான்சன் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக நீதிமன்றத்தில் பேசி இருக்கும் ஜான்சன் "ஜானின் பணம் தனக்கு உரிமையானது தான் என வாதிட்டார். ஆனாலும் அவரது மரணத்தை மறைத்ததை ஒப்புக்கொண்டுள்ளார். அதற்காக நீதிமன்றத்திடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார் அவர். நண்பன் இறந்ததை மறைத்து அவரது பென்ஷன் பணத்தை பயன்படுத்தி வந்த சம்பவம் இங்கிலாந்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

a person from uk revealed why his hiding the death of his friend


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->