0.024 பைசாவிற்காக சிறை சென்றுள்ள நபர் .. எங்கு நடந்து என்று தெரியுமா?! - Seithipunal
Seithipunal



உலகத்தில் அவ்வப்போது சில வினோதமான சம்பவங்கள் நடைபெறும். அந்த வகையில் தற்போது வெறும் 24 பைசாவிற்காக ஒருவர் சிறை சென்றுள்ளார். அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் தான் இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் சம்பர் கவுண்டி என்ற பகுதி உள்ளது. இந்த சம்பர் கவுண்டி பகுதியில் உள்ள ஒரு வங்கியில் தனது கணக்கில் இருந்து பணம் எடுக்க மைக்கேல் பிளெம்மிங் என்பவர் சென்றுள்ளார். இவருக்கு வயது 41. 

மைக்கேல் பிளெம்மிங் பணம் எடுக்கும் படிவத்தை நிரப்பி அங்கிருந்த கவுண்டரில் இருந்த அதிகாரியிடம் கொடுத்துள்ளார். அந்தப் படிவத்தைக் கண்ட வங்கி அதிகாரி அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் அந்தப் படிவத்தில் மைக்கேல் பிளெம்மிங் 1 சென்ட் பணத்தை தனது கணக்கில் இருந்து எடுக்க வேண்டும் என்று எழுதி நிரப்பியிருந்துள்ளார். இந்த தொகையின் இந்திய மதிப்பு 0.024 பைசா என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வளவு குறைந்த அளவு தொகையை எல்லாம் தர முடியாது என்று வங்கி அதிகாரி மறுக்கவே, கோபமடைந்த மைக்கேல் பிளெம்மிங், "நான் வேறு மாதிரியான வார்த்தைகளை பயன்படுத்த வேண்டும் என்று நினைக்கிறீர்களா?" என்று மிரட்டலாக கேட்டுள்ளார். 

இதனால் பயந்து போன வங்கி அதிகாரி போலீசிற்கு தகவல் தெரிவித்து உள்ளார். இதையடுத்து அங்கு வந்த  போலீசார், மைக்கேல் பிளெம்மிங் அதிகாரியை மிரட்டியது மற்றும் அவர் மீது தாக்குதல் நடத்த முனைந்தது ஆகிய குற்றங்களுக்காக அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A Person Went to Prison Just For 24 Paise Do You Know Where


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->