பரபரப்பு! விமான நிலையத்தை அதிர வைத்த பயங்கர வெடிச்சத்தம்! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்திற்கு வெளியே ஏற்பட்ட வெடிச்சத்தம் மற்றும் அதனைச் சூழ்ந்த விளைவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விமான நிலையம் அருகே உள்ள டேங்கர் ஒன்று வெடித்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர், மேலும் இந்த விபத்தில் நால்வர் காயம் அடைந்தனர்.

பல வாகனங்கள் தீப்பற்றி சேதமடைந்தன. இந்த சம்பவம் தொடர்பான வீடியோக்களில், கார்கள் தீப்பற்றி எரியும் காட்சிகளும், அடர்ந்த புகை எழுவதும் பதிவாகியுள்ளன.

சிந்து மாகாண உள்துறை மந்திரி ஜியா உல் ஹசன், இந்த வெடிப்பு ஒரு வெளிநாட்டினர் மீது நடத்தப்பட்ட தாக்குதலாக இருக்கலாம் என்று உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு தெரிவித்தார்.

இதனால் அங்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது, மேலும் தொடர்ந்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடக்க உள்ள நிலையில், இந்த வெடிப்புச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பதட்டத்தை உருவாக்கியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A terrible explosion rocked the Karachi airport


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->