ஆப்கானிஸ்தானை அதிரவைத்த நிலநடுக்கம்: தொடர் பீதியில் மக்கள்!
Afghanistan earthquake people panic
ஆப்கானிஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தான் காபூலில் இருந்து 535 கிலோமீட்டர் தொலைவில் இன்று அதிகாலை 3 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்கமை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கம் 73 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் ரிக்டர் அளவுகோலில் 4.1 எனவும் பதிவாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் சேதம் அல்லது பொருள் சேதம் குறித்து எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
கடந்த அக்டோபர் 7ஆம் தேதி ஹெராத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுவத்தின் காரணமாக 4000 க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனை அடுத்து கடந்த அக்டோபர் 13-ஆம் தேதி மற்றும் 15ஆம் தேதி நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
English Summary
Afghanistan earthquake people panic