11 நாட்கள் பசி, தாகம், உறக்கம் தொலைத்து.. வந்தேறிய அகதிகள்.! உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை.!
African people move to spain
ஆப்பிரிக்க நாட்டின் மேற்கு பகுதியில் இருக்கின்ற மக்கள் வறுமை, வேலை இன்மை உள்ளிட்ட காரணங்களால் ஸ்பெயின் நாட்டிற்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். அவர்களை ஸ்பெயின் காவல்துறையினர் கைது செய்து நாடு கடத்திக் கொண்டு இருக்கின்றனர்.
இதன் காரணமாக அந்த மக்கள் கேனரி தீவுகளுக்கு இடம்பெயர்ந்து வருகின்றனர். இதற்கு ஆபத்தான முறைகளில் அவர்கள் பயணம் செய்கின்றனர். அது போல நைஜீரியா லாகோஸ் பகுதியில் இருந்து மூன்று பேர் கேனரி தீவுக்கு வந்துள்ளனர். அந்த மூன்று பேரும் அலிதினி- 2 என்னை கப்பலுடைய பின்பக்கமாக உட்கார்ந்து கொண்டு பயணித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 11 நாட்கள் தாகம், பசி, உறக்கம் உள்ளிட்டவற்றை தொலைத்து பல நெருக்கடிகளுக்கு மத்தியில் உயிருடன் கேநரி தீவுக்கு வந்துள்ளனர். இவர்களை பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துள்ளனர். தற்போது, அவர்களது உடல்நிலை மோசமாகிவிட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஸ்பெயினின் உள்துறை அமைச்சக அறிக்கை கொடுத்த தகவலின் படி இந்த வருடம் மட்டும் 11,600 பேர் அவர்கள் நாட்டிற்குள் நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஆப்பிரிக்க அவர்கள் பெரும்பான்மையானவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
African people move to spain