தங்க சுரங்கத்தில் கோரவிபத்து! 70 தொழிலார்கள் பலி!
Alas Tragic accident The poor who went for their livelihood
ஆப்பிரிக்கா ,மேற்கு மாலியில் பல தங்க சுரங்கங்கள் சட்டவிரோதமாக நடத்தி வருகின்றனர். அதில் முன்னணி தங்க உற்பத்தியாளர்களில் மாலியும் ஒன்றாகும். அதில் தங்க சுரங்க தளங்கள் தொடர்ந்து நிலச்சரிவுகளால் விபத்துகளுக்கு உள்ளாகி வருகிறது. மேலும் மாலி நாடு உலகின் மிகவும் ஏழ்மையான நாடகக் கருதப்படுகிறது. அங்கு தங்கத்தை ஒழுங்கற்ற முறையில் வெட்டி எடுப்பதைக் கட்டுப்படுத்த அதிகாரிகளால் பல நடவடிக்கை எடுத்துப்பட்டுப் போராடி வருகின்றனர்.
![](https://img.seithipunal.com/media/mali 1-u69gb.jpg)
போலீஸார் விசாரணை:
மேலும் தற்போது அங்கு ஒன்று அந்தத் தங்க சுரங்கத்தில் ஏற்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இது குறித்து விசாரணைச் செய்த போலீசார்க் கூறுகையில்," அச்சுரங்கத்தில் 1800 பேர் இருந்தார்கள்.சரிவைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 48 ஆக அதிகரித்துள்ளது. அதில் சிலர் நிலைத் தடுமாறி சரிந்தவர்கள் தண்ணீரில் விழுந்தனர். அவர்களில் ஒரு பெண் தனது முதுகில் குழந்தையைச் சுமந்து கொண்டிருந்தாள்."எனத் தெரிவித்துள்ளன.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை:
இதனை உள்ளூர் போலீஸ் அதிகாரி ஒருவர் இந்தச் சம்பவத்தை நேரில் சென்று உறுதிப்படுத்தினர். அச்சமயம் கனிபா தங்கச்சரங்கம் தொழிலாளர்கள் சங்கமும் 48 பேர் உயிரிழந்ததாகத் தெரியப்படுத்துள்ளது. மேலும் இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பலரைத் தேடும் பணியில் தீவிரமாகத் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இதற்கு முன்பும் இதே இடத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாகத் தங்க சுரங்கத்தில் ஒரு சுரங்கப்பாதை இடிந்து விழுந்து 70 ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மக்களின் ஆதங்கம்:
ஏற்கனவே இப்படிப்பட்ட சம்பவம் நடந்துள்ளதால் அதனை ஏன் போலீசார்க் கண்டுகொள்ளாமல் தங்கத்துரங்கத்தை மூடாமல் காலம் தாழ்த்தி வருகின்றன? என மக்கள் பலர்க் கேள்வி எழுப்பி உள்ளன.
ஏழ்மையின் காரணமாக அங்குள்ள பல மக்கள் அச்சுரங்கத்திற்குச் சென்று வாழ்வாதாரத்துக்காக வேலைச் செய்து கொண்டிருந்தனர். தற்போது இந்நிகழ்வுகள் நடந்ததால் வாழ்வதற்குப் பார்ப்பார்களா அல்லது உயிரைப் பார்ப்பார்களா என மக்களை யோசிக்க வைக்கிறது .
"பசிக்காகச் சென்றாலும் உயிர்ப் பயத்தோடு தான் வேலைச் செய்ய வேண்டி இருக்கும்" எனப் பல மக்கள் அவர்களின் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Alas Tragic accident The poor who went for their livelihood