உலக பில்லியனர்களின் பட்டியலில் பின் தங்கிய அம்பானி மற்றும் அதானி..? - Seithipunal
Seithipunal


2025 ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர் பட்டியலை ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் பில்லியனர்களின் எண்ணிக்கை 3,028 ஆக உயர்ந்துள்ளது.

இந்த தரவரிசையில் அமெரிக்கா 902 பில்லியனர்களுடன் ஆதிக்கம் செலுத்துகிறது. அதைத் தொடர்ந்து சீனா (516) மற்றும் இந்தியா (205) பில்லியர்களை கொண்டுள்ளன. இதில், 342 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் உலக பணக்காரர் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். 02-வது இடத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் உள்ளார்.

இந்தியாவின் பணக்காரர் மற்றும் ஆசியாவின் பணக்காரர்களில் பட்டியலில் முகேஷ் அம்பானி முதலிடத்தில் உள்ளார்.

கடந்தாண்டு அம்பானியின் சொத்து மதிப்பு 116 பில்லியன் டாலராக இருந்த நிலையில், இந்த ஆண்டு 92.5 பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இதனால், அவர் உலகளவில் பணக்காரர் பட்டியலில் 18 -வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். அத்துடன், அதானி குழுமத்தின் தலைவரான கௌதம் அதானி, 56.3 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் 28-வது இடத்தில் உள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ambani and Adani lag behind in the list of world's billionaires


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->