ஜமைக்கா தலைநகரில் அம்பேத்கர் பெயரில் சாலை.! ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.! - Seithipunal
Seithipunal


ஜமைக்காவுக்கு நான்கு நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்ட குடியசுத் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் இன்று காலை ஜமைக்கா தலைநகர் கிங்ஸ்டன் வந்தடைந்தார்.

இந்தியா ஜமைக்கா இடையேயான 60 ஆண்டு கால நட்பை நினைவு கூறும் வகையில் இந்தியக் குடியரசுத் தலைவர் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ளார். மேலும் ஜமைக்கா சென்ற முதல் இந்திய குடியரசுத் தலைவர் என்ற பெருமையை ராம்நாத் கோவிந்த் பெற்றுள்ளார்.

இதனையடுத்து குடியரசுத் தலைவர் ஜமைக்கா கவா்னா் ஜெனரல் பேட்ரிக் ஆலன் மற்றும் பிரதமா் ஆண்ட்ரூ ஹோல்னஸை சந்தித்து இரு நாட்டுக்குக் இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தினார்.

மேலும் டாக்டர் அம்பேத்கர் பெயரை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஜமைக்காவின் தலைநகர் கிங்ஸ்டனில் உள்ள ஒரு சாலைக்கு சூட்டி பெருமிதம் கொண்டார். அதற்கான பெயர்ப் பலகையையும் திறந்து வைத்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ambetkar name for a street in Jamaica


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->