2 நாட்களாக மக்களை ஆட்டிப்படைத்த முன்னாள் ராணுவ வீரர் பிணமாக மீட்பு: 22 பலி!
America 22 people killed ex soldier committed suicide
அமெரிக்கா, லூயிஸ்டன் நகரில் கடந்த 25ஆம் தேதி ராபர்ட் கார்டு என்பவர் பொதுமக்கள் மீது திடீர் என துப்பாக்கி சூடு நடத்தினார்.
பொது இடங்களான விளையாட்டு விடுதி, ஹோட்டல் போன்ற இடங்களில் புகுந்து துப்பாக்கி சூடு நடத்தியதில் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தப்பி ஓடிய முன்னாள் ராணுவ வீரரான ராபர்டை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.
அவரது வீட்டைச் சுற்றி வளைத்து தேடிய போதும் அவர் கிடைக்காததால் லூயிஸ்டன் நகரம் முழுவதும் போலீசார் தீவிரமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் ராபர்ட் கார்டிடம் துப்பாக்கி இருப்பதால் பொதுமக்கள் அனைவரையும் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு போலீசார் தெரிவித்திருந்தனர்.
கடந்த 2 நாட்களாக போலீசார் தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்ட வந்த நிலையில் ராபர்ட் பிணமாக மீட்கப்பட்டுள்ளார். மேலும் அவரது உடலில் துப்பாக்கி குண்டு காயம் இருந்ததால் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
இவரது உடல் லூயிஸ்டானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள மரங்கள் நிறைந்த பகுதியில் கண்டெடுக்கப்பட்டது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
2 நாட்களாக லூயிஸ்டன் நகரில் பரபரப்பு நிலவி வந்த நிலையில் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
English Summary
America 22 people killed ex soldier committed suicide