ஜப்பான் கடல் உணவுகளை வாங்க அமெரிக்கா ஒப்பந்தம்.!
america agree to buy jappan sea foods
ஜப்பான் நாட்டில் கடந்த 2011ம் ஆண்டு சுனாமி தாக்கியதில், புகுஷிமா அணு உலை கடுமையாக சேதமடைந்து அங்கு மின்சாரம் தயாரிக்கும் பணிகள் நிறுத்தப்பட்டு, அங்கிருந்த கழிவுகளை அகற்றும் பணிகள் பல ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இதனிடையே அணு உலையில் இருந்த தண்ணீரை சுத்திகரித்து, பசிபிக் பெருங்கடலில் விட ஜப்பான் முடிவு செய்தது. ஆனால் இதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கடல் உணவுகளுக்கு சீனா தடை விதித்தது.
சீனாவின் இந்த முடிவினால் ஜப்பானின் மீனவர்கள் மற்றும் கடல் உணவு உற்பத்தியாளர்கள் கடும் பாதிப்பிற்கு ஆளாகினர். இந்த நிலையில், ஜப்பானுக்கு பொருளாதார ரீதியாக உதவும் வகையிலும், சீனாவுடனான பொருளாதார மோதலின் ஒரு பகுதியாகவும், ஜப்பான் நாட்டில் தயாரிக்கப்படும் கடல் உணவுகளை அமெரிக்கா பெருமளவில் கொள்முதல் செய்யும் ஒப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜப்பானுக்கான அமெரிக்க தூதர் ராஹம் இம்மானுவேல், "சீனாவின் பொருளாதார போர்களுக்கு எதிராக பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவிடும் வகையிலான முன்னெடுப்பு தான் இது என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் இந்த ஒப்பந்தத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள சீனா, தூதர்கள் நாடுகளுக்கு இடையே நட்புறவை உருவாக்கும் வகையில் செயல்பட வேண்டுமே தவிர, ஒரு நாடுகளுக்கு இடையே பகை உருவாக்கும் வகையில் பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
English Summary
america agree to buy jappan sea foods