அமெரிக்க விமான நிலைய ஊழியர் விமான என்ஜினில் சிக்கி பலி.! - Seithipunal
Seithipunal


அமெரிக்கா அலபாமாவில் உள்ள மான்ட்கோமெரி நகர் விமான நிலையத்தில் விமான நிலைய ஊழியர் ஒருவர் விமானத்தின் இன்ஜினுக்குள் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

அமெரிக்கா அலபாமா மாகாணத்தில் உள்ள மான்ட்கோமெரி பிராந்திய விமான நிலையத்திற்கு டல்லாஸில் இருந்து பயணிகளுடன் விமானம் ஒன்று தரை இறங்கியது. இதையடுத்து பயணிகள் அனைவரும் இறங்கிய பின்பு விமானம் நிறுத்தும் இடத்தில் விமானம் நிறுத்தப்பட்டது.

இருப்பினும் அந்த விமானத்தின் ஒரு இன்ஜின் மட்டும் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்ததால் இதை அறியாத விமான நிலைய ஊழியர் ஒருவர், விமான த்தின் அருகே சென்றபோது இன்ஜினுக்குள் இழுக்கப்பட்டு உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் விமான நிலையத்தில் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் இந்த விபத்தால் தற்காலிகமாக விமான நிலையம் மூடப்பட்டது. இதையடுத்து அமெரிக்கா மத்திய விமான போக்குவரத்து கழகம் மற்றும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் இந்த விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America airport worker sucked into plane engine in chilling accident


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->